அதிவேக நெடுஞ்சாலைகளில் ஒரே நாளில் கிடைத்த அதிக வருமானம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து மூலம் ஒரே நாளில் 61 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 

25.12.2025 அன்று மாலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் 170,000க்கும் அதிகமான வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தியுள்ளன. 

அதற்கு முந்தைய நாளிலும் 24.12.2025 அன்றும் 170,069 வாகனங்கள் பயணித்திருந்ததுடன், அதன் மூலம் 61.7 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. 

பண்டிகைக் காலம் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகன நெரிசல் அதிகமாகக் காணப்படுவதால், பயணிகள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects