இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அறிவித்தல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இந்த ஆண்டின் ஜனவரி மாதம் 01 ஆம் திகதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 15 இலட்சத்து 15 ஆயிரத்து 043 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந் நிலையில், இவ்வாண்டின் ஆகஸ்ட் மாதத்தின் முதல் 20 நாட்களில் ஒரு இலட்சத்து 46 ஆயிரத்து 755 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

குறிப்பாக, இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 33,588 ஆகும்.

மேலும் ஐக்கிய இராச்சித்திலிருந்து 15,726 சுற்றுலாப் பயணிகளும், இத்தாலியிலிருந்து 10,501 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 9,299சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 8,966 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 8,819 சுற்றுலாப் பயணிகளும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects