இந்திய வம்சாவளி தமிழ் சமூகம் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் இந்திய அரசாங்கத்தின் 750 மில்லியன் ரூபா நிதி உதவியின் கீழ் STEM பாடங்களின் (பௌதிகவியல், இரசாயனவியல் கணிதம், ஆங்கிலம் மற்றும் உயிரியல் ) ஆசிரியர் பயிற்சித் திட்டம் தற்போது இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இத் திட்டம் 05.08.2024 அன்று கொழும்பில் நடைபெற்ற விழாவின் போது ஆரம்பிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின், துணைத் தூதுவர் சத்யஞ்சல் பாண்டே, கல்வி அமைச்சு , நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு ,தேசிய கல்வி நிறுவகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், இந்திய ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் இலங்கையின் தோட்டப் பிரதேசங்களில் உள்ள பல்வேறு பாடசாலைகளைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இத் திட்டத்திற்காகக் கடந்த ஜூலை மாதம் 21 ஆம் திகதி 19 இந்திய ஆசிரியர்கள் இலங்கைக்கு வருகை தந்தனர்.
பாடத்திட்டங்களை மதிப்பாய்வு செய்தல், இலங்கையின் கல்வி முறைகள் மற்றும் கற்பித்தல் முறைகளைப் புரிந்துகொள்வது, பாடத்திட்டத்தில் உள்ள வேறுபாடுகளைக் கண்டறிதல் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇