காத்தான்குடி பிரதேச செயலகத்தில் உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு விசேட நிகழ்வு 21.02.2024 அன்று கலாசார உத்தியோகத்தர்களின் நெறிப்படுத்தலில் பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதரின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பல முன்னைய கால வாழ்வியல்கள் தொடர்பான பல ஆளுமைக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
அந்தவகையில் ஓய்வு பெற்ற அதிபர் ஏ.எல்.எம்.சித்திக் அவர்களினால் உணவுப் பழக்கவழக்கங்கள், ஓய்வு நிலை ஆசிரியர் ஏ.எல்.ஆதம்லெவ்வை பலாஹி அவர்களினால் பாடசாலைக் கல்வியும், மார்க்க கல்வியும் முன்னாள் கல்விப்பணிப்பாளர் எம்.எச்.எம்.இஸ்மாயில்னால் விளையாட்டுகள் பற்றியும் பிரதி அதிபர் யூ.எல்.எம்.என்.முபீன்னால் பொழுதுபோக்குகள் தொடர்பாகவும் மற்றும் ஓய்வு நிலை ஆசிரியர் மௌலவி அப்துல் காதர் பலாஹினால் வெளிநாட்டு பிரயாணங்கள் பற்றியும் , பாவலர் சாந்தி முகைதீனால் இலக்கியம், கலை, கலாச்சாரம் தொடர்பாகவும் முற்காலத்தில் எவ்வாறான உணவுப் பழக்கவழக்கங்கள், விளையாட்டு , பொழுதுபோக்குகள், கலை கலாசாரம் ஆகிய விடயங்களில் நடைமுறைகள் இருந்தது அவை மாற்றமடைந்து தற்போது எவ்வாறு காணப்படுகின்றது, அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்பட்டன.
பிரதேச செயலாளர் மற்றும் மூன்றாவது கண் உள்ளூர் அறிவுத்திறன் செயற்பாடுகளுக்கான நண்பர்கள் குழுவின் நண்பரும் கிழக்கு பல்கலைக்கழக இசைத்துறை விரிவுரையாளருமான பிறிசில்லா ஜோர்ச் ஆகியோரினால் காத்தான்குடி மக்களின் இன்றைய ஆரோக்கியமான வாழ்தல் பற்றி பாடசாலை மாணவர்களுக்கு தெளிவுபடுத்தல் அவசியம் தொடர்பான கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.
இந்நிகழ்வில் காத்தான்குடி பிரதேச கலாசார அதிகார சபை உறுப்பினர்கள் சிலர் கலந்து கொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇