இலங்கை சுங்க பணியாளர்கள் இன்று (04.07.2024) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
சுங்கம், மதுவரி மற்றும் இறைவரி ஆகிய மூன்று திணைக்களங்களை ஒன்றிணைக்க எதிர்ப்பு தெரிவித்து இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இது தொடர்பாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர், போராட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇