தினமும் உணவில் நெய் சேர்ப்பது உடலுக்கு நன்மை ஏற்படுத்துமா?
தினமும் உணவில் நெய் சேர்ப்பதால் ஏற்படும் பலன்கள் குறித்து அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்று ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டது. வெண்ணெய்யை விட உருக்கப்பட்ட சுத்தமான நெய்யில் கொழுப்பு குறைவாக உள்ளதால், வேகமாக செரிமானிக்கும் திறன் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
தினமும் நெய் சேர்ப்பது உடல் நலம் மற்றும் மன நலனுக்கு உகந்தது. இதனால், உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். உடலில் உள்ள கெட்டச் சத்துக்களை வெளியேற்றவும், கண் பார்வையை அதிகரிக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் நெய் உதவுகிறது.
விட்டமின் ஏ, டி, இ, கே ஆகியவை நெய்யில் உள்ளதால் உடலில் ரத்தத்ததை சுத்தப்படுத்தி ரத்த சுழற்சியை மேம்படுத்தும். நெய்யில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் புரதம் நிறைந்திருப்பதால் உடலுக்கு நன்மையளிக்கிறது.
உடலிலுள்ள தேவையற்ற சத்துக்களை வெளியேற்றவும், இதய ஆரோக்கியத்திற்கும் உதவியாக உள்ளது. உடல் பருமனாக உள்ளவர்கள் நெய் சேர்ப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எனக்கூறப்படுகிறது.
அதேநேரம், நோய் பாதிப்பு எதுவும் இல்லாதவர்கள் எந்த பயமுமின்றி தினமும் சுத்தமான நெய்யை உணவில் சேர்த்து கொள்ளலாம்.
மாணவர்களுக்கு நினைவுத்திறன் அதிகரிக்கும். நரம்பு மண்டலங்களுக்கு புத்துணர்ச்சி கிடைத்து. செரிமானத்தை ஊக்குவிப்பதால் நாம் எடுத்து கொள்ளும் உணவில் எடை குறையாமல் சமநிலையில் வைக்க உதகின்றது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇