க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டுக் கொடுப்பனவை அதிகரிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பாக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை 09.07.2024 அன்று அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தை உள்ளடக்கிய உப குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இது தொடர்பான பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளத
இதன்மூலம், விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட கட்டணம் வழங்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇