2030 இல் அனைத்து பாடசாலை மாணவருக்கும் சீருடைகள் மற்றும் மதிய உணவுகள் போன்ற வசதிகள் முறையாக அதிகரிக்கப்படும் மற்றும் 2030 ஆம் ஆண்டளவில், அனைத்து மாணவர்களுக்கும் இலவச பள்ளி மதிய உணவு வழங்கப்படும், அதற்கான ஏற்பாடுகளை செய்வது தொடர்பான விவாதங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
இவற்றுக்கு மத்தியில் குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளை இடையூறு இன்றி பேணுவதில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென வலியுறுத்திய அமைச்சர், நிலையான கல்வித் திட்டத்தைத் தொடர அனைவரின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
பாடசாலைகளில் அதிபர்கள் பற்றாக்குறையை தவிர்க்கும் வகையில் 4718 அதிபர் நியமனங்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
One Response
aha seinga first ah.