இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் புதிய தலைவராக சுனில் ஜயரத்ன இன்று (04.11.2024) தனது கடமைகளை தலைமையகத்தில் பொறுப்பேற்றார்.
சுனில் ஜயரத்ன இலங்கை சுங்கத் திணைக்களத்தில் 37 வருடங்கள் பணியாற்றியதோடு, அதன் மேலதிக பணிப்பாளர் நாயகமாகவும் கடமையாற்றியுள்ளார்.
சுமார் மூன்றரை ஆண்டுகள் சுங்கத்துறை செய்தித் தொடர்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
மேலும், சுனில் ஜயரத்ன ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் அவுஸ்திரேலியாவின் கான்பெரா பல்கலைக்கழகத்தில் சுங்க சட்டம் மற்றும் நிர்வாகத்தில் முதுகலைப் பட்டதாரி ஆவார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇