மட்டக்களப்பில் தமிழோடு விளையாடு நிகழ்வானது வாகை அம்மையாரின் தலைமையில் சிறுதானிய உற்பத்திகளும் இணைந்து தமிழ் ஒபேரா நிருவனத்தின் ஏற்பாட்டில் கல்லடி சிறுவர் பூங்காவில் (19.01.2024 ) அன்று இடம்பெற்றது.
இந் நிகழ்வில் சிறுவர்கள் மற்றும் பெற்றோர் எனப்பலரும் பங்குபற்றியிருந்தனர்
மக்களிடையே கலப்பற்ற தூய தமிழில் உரையாடுவதை மேம்படுத்தும் நோக்கில் தமிழோடு விளையாடு நிகழ்வு (19.01.2024 ) அன்று முதல் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளின் இந் நிகழ்வு இடம் பெறவுள்ளது.
சிறுவர்களிடையே வேற்று மொழி கலப்பின்றி செந்தமிழில் உரையாடுவதை ஊக்கப்படுத்தும் முகமாக தமிழோடு விளையாடு நிகழ்வு முன்னேடுக்கப்படவுள்ளது .
.உள்ளூர் உற்பத்தி முயற்யாளர்களான ஆணிவேர் சிறுதானிய உணவு உற்பத்தி நிலையத்தினால் பாரம்பரிய ஆரோக்கியமான உணவுகளை உற்பத்தி செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇