கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை செப்டெம்பர் மாதம் வெளியிடுவதற்குப் பரீட்சைகள் திணைக்களம் தயாராக இருப்பதாகக் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கடந்த இறுதி வாரத்தில் செய்முறைப் பரீட்சைகள் நிறைவடைவடைந்துள்ளது. விடைத்தாள்கள் திருத்தப் பணிகளும் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், செப்டம்பர் மாதத்திற்குள் பெறுபேறுகளை வெளியிட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய மாதங்களுக்குள் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇