கடந்த ஒன்பது நாட்களில் மாத்திரம் 1,050 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் கடந்த 24 மணித்தியாலங்களில் 148 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் மொத்தமாக 33,795 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அதிக டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், இதுவரையில் 13,685 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்தில் மாத்திரம் டெங்கு நோயினால் 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇