2028ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள அடுத்த ஒலிம்பிக்கில் 128 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் இடம்பெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
1896 ஆம் ஆண்டு ஏதென்ஸில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் பட்டியலிடப்பட்ட விளையாட்டுகளில் ஒன்றாக கிரிக்கெட் இடம்பெற்றது.
ஆனால் குறைந்த எண்ணிக்கையிலான அணிகள் பங்கேற்றதன் காரணமாக அதைத் தொடர முடியவில்லை என ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
1900 ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே முதல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
இதில் இங்கிலாந்து அணி 158 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற இங்கிலாந்து அணிக்கு வெள்ளிப் பதக்கமும், பிரான்ஸ் அணிக்கு வெண்கலப் பதக்கமும் வழங்கப்பட்டதுடன், அந்தப் பதக்கங்கள் பின்னர் தங்கம் மற்றும் வெள்ளியாக மாற்றப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் அதன்பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்படவில்லை.
இப்போது ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ள செய்தி வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், 2028 ஒலிம்பிக் போட்டிகளில் baseball/softball, flag football, lacrosse (sixes) மற்றும் ஸ்குவாஷ் ஆகியவை சேர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇