தேங்காய்களைக் குறைந்த விலையில் விற்பனை செய்யும் நடமாடும் சேவை இன்று (28.10.2024) நாரஹேன்பிட்டி தொழிலாளர் அலுவலக வளாகத்தில் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
தேங்காய் விற்பனைக்கான நடமாடும் சேவை காலை 9.00 மணி முதல் திறக்கப்படும்.
இதன்போது பெரிய தேங்காய் ஒன்றை 120 ரூபாய்க்கு பெற்றுக் கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு செல்லும் வாடிக்கையாளர்களுக்கு 5 தேங்காய்களும், கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் முதியோர்களுக்கு 10 தேங்காய்களும் விற்பனை செய்யப்படவுள்ளது.
மேலும், தெஹிவளை நகரில் நாளை (29.10.2024) நடமாடும் தேங்காய் விற்பனை முன்னெடுக்கப்படும் எனத் தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇