தேசிய விருது பெற்ற வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

சுக வனிதையர் சிகிச்சை சேவைகள் தொடர்பான தேசிய ரீதியிலான செயல்திறன் மதிப்பீட்டில் தேசிய ரீதியில் உள்ள அனைத்து சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களின் மத்தியில் அதி உயர் தரக்கணிப்பின் மூலம் புத்தாக்கம், படைப்பாற்றல் மற்றும் தொடர் கண்காணிப்பு ஆகிய பிரிவுகளில் சேவையினை வழங்கியமைக்காக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு தேசிய ரீதியில் முதலிடம் வழங்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக அமைச்சின் செயலாளர் வைத்திய கலாநிதி பாலித மஹிபால, அமைச்சின் பிரதிநிதி சுசில் பெரேரா, ஐக்கிய நாடுகள் பிரதிநிதி மற்றும் குடும்ப சுகாதார பணியகத்தின் தலைவர் சித்ரமாலி டீ சில்வா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்விலக்கை அடைய குடும்ப சுகாதார பணியகம், பிராந்திய சுகாதார பணிப்பாளர் மற்றும் பிராந்திய தாய் சேய் சுக நல பிரிவினரின் வழிகாட்டால் உறுதுணையாக இருந்ததாக சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தேவவராஜமுதலி ஸ்டீவ் சஞ்ஜிவ் தெரிவித்தார் .

அத்துடன் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் குறித்த சேவையில் படிப்படியாக கடந்த ஜந்து வருட காலம் முன்னேற்றமடைந்தே இந்த இலக்கை எட்டி தேசிய ரீதியில் முதல் இடத்தை பிடித்தது, இதற்காக சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தேவவராஜமுதலி ஸ்டீவ் சஞ்ஜிவ் தலைமையில் அவரது வழிகாட்டலில் தாதிய உத்தியோகத்தர், மேற்பார்வை மருத்துவ மாது, பொதுசுகாதார மாதுகள் ஆகியோரின் வினைத்திறனான அயரான சேவையினாலும், வாழைச்சேனை அன்னையர் குழுக்களின் பூரண ஒத்துழைப்பினாலும் இவ்விருது கிடைக்கப்பற்றுள்ளது. அத்துடன் தொடர்ந்தும் மக்களுக்கு உயர்தர சேவைகளை இந்நிறுவனம் வழங்கி வருவதோடு ஒவ்வொரு வருடமும் 35 வயது 45 வயது அடங்கிய பெண்கள் கட்டாயம் கற்ப்பப்பை கழுத்து புற்று நோயை கண்டறியும் பரிசோதனையான PAP பரிசோதனையை MOH இல் இலவசமாக செய்து பயனடைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

மக்களும் குறித்த சேவையை ஆர்வத்துடன் பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects