ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணக்கருவில் உதித்த காணியற்ற மக்களுக்கு காணி வழங்கும் “உறுமய ” தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் சீர்திருத்த ஆணைக்குழுவின் காணியில் குடியிருக்கும் மக்களுக்கு உறுதி வழங்குவதற்கான நடமாடும் சேவையானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் என்.விமல்ராஜின் ஏற்பாட்டில் புதிய மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
வாழ்வாதாரத்தை மேற்கொள்வதற்கான காணியற்ற மக்களுக்கு மிக விரைவாக சட்டபூர்வமான உரித்து வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
அந்தவகையில் சிறிய தொகை பணத்தை செலுத்தி நிலம் ஒன்றினை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு இலகுவாகவும் விரைவாகவும் பெற்றுக் கொள்வதற்கான கைவிரல் அடையாளம், உறுதியை பிரதி செய்தல், ஆவணம் பூர்த்தி செய்தல் போன்ற நடமாடும் சேவைகள் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நிஹால், காணி சீர்திருத்த ஆணைக் குழுவின் உத்தியோகத்தர்கள், காணி சீர்திருத்த ஆணைக்குழு உத்தியோகத்தர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇