2024ம் ஆண்டிற்கான பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடை துணிகள் கிடைக்காவிட்டால் அறிவிக்குமாறு கல்வி அமைச்சினால் பாடசாலை அதிபர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
பாடசாலை பாடப்புத்தகங்கள் கிடைக்கப்பெறாத பாடசாலைகள் 0112784815 அல்லது 0112785306 என்ற தொலைப்பேசி இலக்கத்திலும், சீருடை துணிகள் கிடைக்காத பாடசாலைகள் 0112785573 என்ற இலக்கத்திலும் தொடர்பு கொள்ள முடியும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய சீருடைகள் மற்றும் பாடசாலை பாடப்புத்தகங்கள் நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலை அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇