மட்டக்களப்பு களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலயத்தில் போதைப்பொருள் தடுப்பு வார நிகழ்வு கல்குடா களுவன்கேணி பாடசாலை அதிபர் ரி.பிரார்த்தனன் தலைமையில் நடைபெற்றது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் போதைப்பொருளை ஒழிப்பதற்கு மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் “முழு நாடும் ஒன்றாக – தேசிய செயல்” திட்டத்துடன் இணைந்து போதைப்பொருள் தடுப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இதன் ஓர் அங்கமாக களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலய மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருத்துக்கள் வழங்கப்பட்டன.
எமது நாட்டின் எதிர்கால தலைவர்களான சிறார்களுக்கு போதைப்பொருள் பாவனையினால் ஏற்படும் தாக்கம் மற்றும் அதன் பாதிப்புக்கள் தொடர்பான தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வின் வளவாளராக மாவட்ட போதைப்பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர் ப.தினேஸ், போதைப்பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர்களான எஸ்.கார்த்திக், தயானந்தன், வி.ஜெகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇






இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










