இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வுக்கான ஒத்திகை நடவடிக்கைகளுக்காக விசேட போக்குவரத்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நாளை 30.01.2024 முதல் எதிர்வரும் 4ஆம் திகதிவரை இந்த போக்குவரத்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, காலி வீதியின் சில பகுதிகள் மூடப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
அதன் பிரகாரம் , காலி வீதியின் கொள்ளுப்பிட்டி சந்தி முதல் காலி முகத்திடல் வரையான பகுதியும் செரமிக் சந்தியிலிருந்து காலி முகத்திடல் வரையிலான பகுதியும் பல கட்டங்களின் கீழ் நாளை 30.01.2024 முதல் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதிவரை மூடப்படவுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇