தேயிலை, இறப்பர், தெங்கு, கறுவா மற்றும் மிளகு ஆகிய பெருந்தோட்ட பயிர் ஏற்றுமதி மூலம் முதல் 4 மாதங்களில் 1,118 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது அந்த எண்ணிக்கை 234 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.
கடந்த வருடம் இதே காலப்பகுதியில் குறித்த பயிர் ஏற்றுமதி மூலம் 884 மில்லியன் டொலர் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇