இலங்கையில் எய்ட்ஸ் நோயாளர்கள் கண்டறியப்படும் விகிதம் 300 வீதத்தால் அதிகரித்துள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்கள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந் நிலைமையைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதன் தலைவர் வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
2018 ஆம் ஆண்டில் எய்ட்ஸ் நோயாளர்கள் கண்டறியப்படும் விகிதம் நாட்டின் சனத்தொகையில் ஒரு மில்லியனுக்கு 0.03 வீதமாகக் காணப்பட்டது.
எனினும், தற்போது குறித்த விகிதம் 0.1 வரை அதிகரித்துள்ளது
இதன்படி எய்ட்ஸ் நோயாளர்கள் கண்டறியப்படும் விகிதம் 300 வீதமாகப் பதிவாகியுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇