நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட்டுள்ள யானைகள் கணக்கெடுக்கும் பணி இன்றுடன் (19.08.2024) நிறைவடையும் என வனவிலங்கு திணைக்களம் தெரிவித்துள்ளது.
யானைகளின் கணக்கெடுப்பு அறிக்கையை வழங்குவதற்கு சுமார் 03 மாதங்கள் ஆகும் என அதன் பணிப்பாளர் நாயகம் எம்.ஜி.சி.சூரியபண்டார தெரிவித்துள்ளார். 13 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 17ம் திகதி யானைகள் கணக்கெடுக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது.
3,200 மையங்களை மட்டும் வைத்து மூன்று நாட்களாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாக வனவிலங்குகள் பணிப்பாளர் நாயகம் எம்.ஜி.சி.சூரியபண்டார தெரிவித்தார். அதற்காக சுமார் 7,000 வனவிலங்கு அதிகாரிகள் குழு கணக்கெடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக வனவிலங்கு திணைக்களம் தெரிவித்துள்ளது.
மூன்று நாட்களில் யானைகள் குறித்து கிடைத்த தகவல்கள் கணினிமயமாக்கப்பட உள்ளதுடன் மூன்று மாதங்களின் பின்னர் நாட்டில் காட்டு யானைகளின் எண்ணிக்கை தொடர்பில் அறிக்கை வெளியிடப்பட உள்ளது.
இதேவேளை கடந்த 2011ஆம் ஆண்டு காட்டு யானைகள் கணக்கெடுப்பு நாடு முழுவதையும் உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் நாட்டில் 5,879 காட்டு யானைகள் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇