அப்பிள் (Apple) நிறுவனத்தின் அடுத்த படைப்பான ஐபோன் 16 ப்ரோ (iPhone 16) மற்றும் ப்ரோ மேக்ஸ் (Pro max) கையடக்க தொலைபேசிகள் குறிப்பிடத்தக்க மேம்படுத்தல்களைக் கொண்டிருக்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய வகை ஐபோன் கைப்பேசிகளை அப்பிள் நிறுவனம் வழக்கத்தின்படி செப்டம்பர் மாத தொடக்கத்தில் வெளியிடவுள்ளது.
அத்துடன் இவ்வருடம் வெளியாகவுள்ள ஐபோன் 16 ப்ரோ மற்றும் ப்ரோ மெக்ஸ் தொலைபேசிகளில் செயற்றிறன் மற்றும் கேமராக்களில் குறிப்பிடத்தக்க மேம்படுத்தல்கள் காணப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி ஐபோன் 16 ப்ரோவின் தனித்துவமான அம்சங்களில் ஒன்றாகப் பெரிய OLED திரைகள் இருக்கும் என்று தெரியவந்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇