நீர் கட்டண திருத்தம் குறித்து தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இன்று (26.08.2024) அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவித்தலில் குறிப்பிடப்படுவதாவது,
நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தின் பிரகாரம் ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதியிலிருந்து நீர் கட்டணத்தைத் திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
அதன்படி, உள்நாட்டு சமுர்த்தி பெறுபவர்கள் மற்றும் வீட்டு பாவனையாளர்களுக்கு 7 சதவீதமாகவும், அரச வைத்தியசாலைகளுக்கு 4.5 சதவீதமாகவும், பாடசாலை மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்களுக்கு 6.3 சதவீதமாகவும் நீர் கட்டணத்தைத் திருத்துவதற்குத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.