மட்டக்களப்பில் திரையிடப்பட்ட போடியார் திரைப்படம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மட்டக்களப்பின் மண்வாசனை வீசும் திரைப்படமாக உருவாகிய “போடியார்” திரைப்படமானது 23-08-2024 அன்று மட்டக்களப்பு விஜயா திரையரங்கில் வெளியிடப்பட்டது.

தொடர்ந்து 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் தலா மூன்று காட்சிகள் வீதம் மொத்தமாக ஏழு காட்சிகள் திரையிடப்பட்டன.

Visual Art Movies நிறுவனத்தின் சார்பில் போடியார் திரைப்படத்தை பேராசிரியரும் வைத்திய நிபுணருமான அருளானந்தம், சிரேஸ்ட விரிவுரையாளர் சதா சண்முகநாதன், Visual Art Movies நிறுவனத்தின் உரிமையாளர் ப.முரளிதரன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

முரளிதரனின் கதை, திரைக்கதை, வசனத்திலும், கோடீஸ்வரனின் இயக்கத்திலும், AJ சங்கர்ஜனின் இசையமைப்பிலும், ஜனா RJ, RJ நெலு, ஷாஷா கிரேஸ், சுஜானி பீட்டர், கலைமாமணி காண்டிபன், முரளிதரன், பாரதி கென்னடி, சந்திராவதி, நவரெட்னராஜா உட்பட பலரின் நடிப்பிலும் போடியார் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படத்தினை மட்டக்களப்பு சிறைக்கைதிகள் நலன்புரிச் சங்கத்தினர் மற்றும் மெதடிஸ்த மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினர் ஆகியோர் குறிப்பிட்ட தொகைக்கு கொள்வனவு செய்து விசேட காட்சிகளை திரையிட்டு அதன் மூலம் தத்தமது சங்கங்களிற்கு நிதி திரட்டும் செயற்பாட்டினையும் மேற்கொண்டனர்.

இச்செயற்பாடானது வர்த்தக சினிமாவை வளர்ப்பதில் ஒரு முக்கிய மைல்கல்லாக தாம் உணர்வதாக முரளிதரன் தெரிவித்துள்ளதோடு இவ்வாறு ஏனைய நலன்புரி அமைப்புகள் மற்றும் சங்கங்களும் விசேட திரையிடல்களைச் செய்ய முன்வருமாறு அழைப்பு விடுத்தார்.

திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் கருத்துக்களும் சிறப்பாக உள்ளதாக மக்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

புகைப்பட உதவி: M.சிவகுமார்

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects