நாசா விண்வெளி வீரர மேத்யூ டொமினிக் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) இருந்து எடுக்கப்பட்ட படங்களை இணையத்தில் அவ்வப்போது பகிர்ந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அவர் பகிரும் புகைப்படங்கள் மக்களிடையே வியப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் விண்வெளி வீரர் மேத்யூ டொமினிக் சமீபத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் பசிபிக் மீது நிலவு அமைவதை காட்டுகிறது.
இணையத்தில் புகைப்படத்தை பகிர்ந்த அவர், “ஹவாய் அருகே வெப்பமண்டல புயல் ஹோனை படமெடுக்க குபோலாவுக்குச் சென்றோம். ஆனால் நாங்கள் புயலைக் கடந்த உடனேயே சந்திரன் அஸ்தமிக்கத் தொடங்கியது” என்று விளக்கினார்.மேலும், டொமினிக் புகைப்படத்தைப் பற்றிய தொழில்நுட்ப விவரங்களையும் அளித்தார், “400mm, ISO 500, 1/20000s ஷட்டர் வேகம், f2.8, க்ராப்ட், டெனோயிஸ்டு” என்று குறிப்பிட்டார்.
இந்த புகைப்படம், பகிரப்பட்டதிலிருந்து 6.3 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்று வைரலாகியுள்ளது. மேலும் கிட்டத்தட்ட 7,400 லைக்குகளையும் பெற்றுள்ளது. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரித்து வருகிறது. பலரும் இந்த இடுகைக்கு பதிலளித்துள்ளனர். சிலர் இந்த படத்தை “நம்பமுடியாதது” என்றனர். எக்ஸ் பயனர் ஒருவர், “இது மனதைக் கவருகிறது” என்றார். மற்றொருவர் “இந்த புகைப்படம் என் இதயத்தை தொட்டது” என்று பதிலளித்தார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇