மலையக மார்க்கத்திலான புகையிரத சேவை வழமைக்கு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கடந்த 7 நாட்களாக கொழும்பு கோட்டைக்கும் எல்லவுக்கும் இடையில் மட்டுப்படுத்தப்பட்டிருந்த மலைநாட்டுத் புகையிரதச் சேவை இன்று (16.10.2024) முதல் வழமைக்குத் திரும்பியுள்ளதாகத் புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையில் வழமைபோல புகையிரதச் சேவைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய – இலங்கை கூட்டு முயற்சியிலான திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பின் காரணமாக, மலைநாட்டுத் புகையிரதச் சேவை கடந்த 9 ஆம் திகதி முதல் நேற்றுவரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

குறித்த தினங்களில் காலை 7.30 முதல் மாலை 5.30 வரையில் கொழும்பு கோட்டைக்கும் எல்லவுக்கு இடையில் மாத்திரம் புகையிரதச் சேவை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects