மே 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சாதாரணத் தர பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் என்பன 30.04.2024 அன்று நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சை காலப்பகுதியில், பாடங்கள் தொடர்பான குறிப்புக்கள், பாட விரிவுரை, வகுப்புகள் நடத்துதல் மற்றும் கருத்தரங்குகள் போன்றவற்றை நடாத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் பரீட்சை தொடர்பான வினாக்கள் வழங்கப்படும் என சுவரொட்டிகளை காட்சிப்படுத்தல், கையேடுகள் வழங்குதல் மற்றும் அச்சிடப்பட்ட கையேடுகள் வழங்குதல் போன்ற செயற்பாடுகளும் தடை செய்யப்பட்டுள்ளதாக அத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇