2022/2023 கல்வியாண்டிற்காக பல்கலைக்கழகங்களில் மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை ஜனவரி மாதம் முதல் ஆரம்பமாகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
முதற்கட்டத்தில் 42,145 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இம்முறை கலைப்பீடத்திற்கு அதிகளவான மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 11,780 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇