நீங்கள் உலகில் எங்கு வாழ்ந்தாலும், ஏப்ரல் முதலாம் திகதி நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை விளையாட்டாக மக்கள் ஏமாற்றுவதை பார்க்கலாம். மேலும் இந்த நாளில் நாமெல்லாம் பள்ளிப் பருவத்தில், சக நண்பர்களிடம், வீட்டில் உள்ளவர்களிடம் அன்று ஏமாறாமல் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்ட நாட்களை மறக்க முடியாது. அதேபோல ஒருவரையாவது ஏமாற்றி விட வேண்டும் என்ற விளையாட்டுத்தனமும் அதில் இருந்த ஆர்வமும் மறக்க முடியாது.
ஆனால் இதற்கான வரலாறு என்னவென்று தெரியாமலிருக்கும் உலக முட்டாள்கள் தினம் உருவான வரலாறு உங்களுக்காக….
1564 ஆம் ஆண்டு பிரான்சில் ஏப்ரல் முட்டாள்கள் தினம் (April Fool’s Day) தொடங்கியது என வரலாறு கூறுகின்றது. 1564 ஆம் ஆண்டுக்கு முன், ஏப்ரல் 1 ஆம் திகதி புத்தாண்டு தினமாக கொண்டாடப்பட்டது. பழைய நாட்காட்டியை பின்பற்ற வலியுறுத்தியவர்கள் முட்டாள்கள் என்று அழைக்கப்பட்டனர். மேலும் புதிய நாட்காட்டி ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஜனவரிக்கு மாற்றப்பட்டன. இருப்பினும், மக்களில் சில பிரிவினர் மார்ச் அல்லது ஏப்ரல் 1 ஆம் திகதிகளில் தொடர்ந்து புத்தாண்டைக் கொண்டாடினர், மேலும் புதிய நாட்காட்டியை ஏற்றுக்கொண்டவர்கள் புரளிகள் மற்றும் நகைச்சுவைகளுக்கு ஆளாகினர். அந்த மக்கள் பிரிவுகள் ஏப்ரல் முட்டாள்கள் என்று அழைக்கப்பட்டனர். பின்னர் 18 ஆம் நூற்றாண்டில், ஏப்ரல் 1 முட்டாள் தினம் என பிரிட்டன் முழுவதும் பரவியது.
மொத்தத்தில் ஏமாற்றுவதையும், ஏமாறுவதையும் சிரித்தபடி ஏற்கும் பக்குவத்தை பேதமில்லாமல் அனைவருக்கும் ஊட்டும் இந்த தினத்தை உலகம் முழுவதும் கொண்டாடி மகிழ்கின்றனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇