எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ள இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஜோஸ் ஹல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகவுள்ளார்.
20 வயதான அவர், இங்கிலாந்தின் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் அபார திறமையை வெளிப்படுத்தி வந்த நிலையில், இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடரின் போது காயமடைந்த இங்கிலாந்து அணியின் மார்க் வுட்க்கு பதிலாக ஜோஸ் ஹல் இரண்டாம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்காக அழைக்கப்பட்டிருந்தார்.
எனினும், அவர் இறுதி பதினொருவர் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கவில்லை.
இந்தநிலையில், இறுதிப் போட்டியில் ஜோஸ் ஹல்லுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
குறித்த தொடரில் முன்னதாக இடம்பெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், 2க்கு 0 என்ற அடிப்படையில் தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇