யாழ். இந்திய துணைத்தூதுவர் சாய் முரளி கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ். முரளிதரனை 04.09.2024 அன்று மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இச் சந்திப்பின் போது, இந்திய அரசாங்கத்தினால் வடபகுதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் கிளிநொச்சி மாவட்ட மக்களின் வாழ்வாதார நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
அரச உத்தியோகத்தர்களின் அறிவு மற்றும் ஆளுமை திறன்களை விருத்திசெய்யும் வகையில் இந்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற பயிற்சித் திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇