சிறுவர் திறன் வளர்ச்சிக்கான கலையூடான செயற்பாட்டை ஊக்கப்படுத்தும் வகையில் அழகிய சிறுவர் கழக சிறார்களின் பங்குபற்றுதலுடன் பட்ட திருவிழா பாசிக்குடா கடற்கரை முன்றலில் இடம்பெற்றது.
பிரதேச சிறுவர் சபை தலைவர் செல்வன் வீ.அரோஜன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கோறளைப்பற்று, பிரதேச செயலாளர் ஜெயானந்தி திருசெல்வம் பிரதம அதிதியாக கலந்துகொண்டனர்.
மேலும் இந் நிகழ்வில் பதவிநிலை அதிகாரி, சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர், விளையாட்டு உத்தியோகத்தர், கலாசார உத்தியோகத்தர்கள் என பலரும் பங்குபற்றியிருந்தனர்.
07 சிறுவர் கழக சிறார்களின் பட்டம் வானில் ஏற்றப்பட்டதுடன் பங்குபற்றிய அனைத்து சிறுவர்களுக்கும் அதிதிகளினால் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வில் சிறுவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் என அதிகளவிலானோர் கலந்துகொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇