அரசியலமைப்பின் 107ஆவது சரத்தின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கான 4 புதிய நீதியரசர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேல் நீதிமன்ற நீதிபதிகளான கே.எம்.ஜி.எச்.குலதுங்க, டி.தொடவத்த, மற்றும் ஆர்.ஏ.ரணராஜா ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கான புதிய நீதியரசர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், முன்னாள் சிரேஷ்ட பிரதி மன்றாடியர் நாயகம் எம். சி. எல். பி. கோபல்லவவும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று (06.09.2024) குறித்த நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇