மட்டக்களப்பு வரலாற்றில் முதல் தடவையாக 6 வயதுடைய காவ்யஸ்ரீ என்ற மாணவி உலக சாதனை ஒன்றை நிலைநாட்டி உள்ளார்.
இவர் மூன்று, நான்கு, ஐந்து மற்றும் ஆறு வரிசைகளைக் கொண்ட 200 கூட்டல் மற்றும் கழித்தல் கணக்குகளுக்கு 6 நிமிடங்கள் 50 வினாடிகளில் விடையளித்து சோழன் உலக சாதனை படைத்துள்ளார்.
மட்டக்களப்பு பொறியாளர் சுப்ரமணியம் மற்றும் மருத்துவர் ஹிசாந்தினி ஆகியோரின் மகளே இச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இச் சாதனை நிகழ்வு 08.09.2024 அன்று இடம்பெற்றது.
இந் நிகழ்வை சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனம் , பீபல்ஸ் ஹெல்பிங் , பீபல்ஸ் பவுண்டேஷன் மற்றும் கதிரவன் சமூக அபிவிருத்தி நிறுவனம் போன்ற அமைப்புகள் இணைந்து நடாத்தியிருந்தது.
இதைத்தொடர்ந்து குறித்த மாணவியின் சாதனையை அனைவரும் பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇