இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் இலங்கை 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளதாக மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன.
குறித்த காலப்பகுதியில் இலங்கை 2.17 பில்லியன் டொலர்களை ஈட்டியுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 66.1 வீத அதிகரிப்பாகும் என மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.
அதுபோல் இந்த வருடம் குறித்த காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், சுற்றுலாப் பயணிகளின் வருகை 50.7 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.
அத்துடன், 2024 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 1.36 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகவும் மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇