அபோபிஸ் [Apophis] என்பது எகிப்திய நாகரிகத்தில் அழிவின் கடவுளுக்கு வழங்கப்பட்டுள்ள பெயராகும்.
இந்த பெயர் தற்போது பூமியை நோக்கி வேகமாக நகர்ந்து வரும் பெரிய விண்கல் ஒன்றுக்குச் சூட்டப்பட்டுள்ளது.
இந்த விண்கல் மனிதக் குலத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
கடந்த 2002ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த விண்கல் எதிர்வரும் 2029ஆம் ஆண்டு மே 13ஆம் திகதி பூமியைத் தாக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்த விண்கல்லை Space Objects Tracking and Analysis உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் இந்த அச்சுறுத்தலில் இருந்து தப்பிக்க இந்தியா அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என்றும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
இந்த விண்கல் வேறெந்த விண்கல்லும் இதுவரையில் பூமியை நெருங்காத அளவுக்கு, பூமியிலிருந்து 32,000 கீலோமீற்றர் தொலைவுவரை நெருக்கமாக பயணிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
2029 இல் பூமிக்கு மிக அருகில் வரும் இந்த விண்கல் பூமி மீது மோதும் பட்சத்தில் பேரழிவு ஏற்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇