பாணந்துறை கடற்கரையில் அரியவகை கடல்வாழ் உயிரினமான கொட்டலசுகள் (Barnacle) திடீரென கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸ் உயிர்காப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கொட்டலசு என்பது கடலில் வாழும் ஒட்டுடலி உயிரினம் ஒன்றாகும். இது பெரும்பாலும் கடலில் உள்ள பாறைகளில் ஒட்டிவாழும்.
கரை ஒதுங்கியுள்ள இந்த கொட்டலசுகள் கடற்கரையில் உள்ள பாரிய மரக்குற்றில் ஒட்டிக்கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கொட்டலசுகளை காண்டுகளிப்பதற்காக பெரும்பாலான மக்கள் பாணந்துறை கடற்கரைக்கு வந்து போவதாக பொலிஸ் உயிர்காப்பு பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇