தொழிநுட்பக் கோளாறுகள் காரணமாக பல ரயில் பெட்டிகள் இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
12 ரயில் பெட்டிகளின் மின் கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ளதால், அவை சேவையிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இரத்மலானையில் உள்ள புகையிரத தளத்திற்கு திருத்த வேலைகளுக்காக ரயில் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும், தொழில்நுட்ப ஊழியர்களின் பற்றாக்குறை காரணமாக திருத்தப் பணிகள் தாமதமடைவதாகவும் சிரேஷ்ட பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇