கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளில் இருந்து சர்ச்சைக்குரிய மூன்று கேள்விகளை முறையான விசாரணைகளுக்கு பின்னர் நீக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாள் போன்று மாதிரி வினாத்தாள் ஒன்று அலவ்வ பிரதேசத்தில் வட்ஸ்அப் குழுக்களில் பரவி வருவதாக எழுந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைக்கு பின் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, நாம் மேற்கொண்ட விசாரணையின் போது அவர் தெரிவித்தார்.
இதன்படி, இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக 18.09.2024 அன்று விசாரணை அதிகாரிகள் குழுவொன்று சம்பந்தப்பட்ட பகுதிக்கு செல்லவுள்ளதாகவும், அவர்களின் அறிக்கையின் பின்னர் சம்பந்தப்பட்ட வினாக்களை நீக்குவது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇