சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 10 இலட்சத்து 17,004 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. 

கடந்த மாதத்தின் 28 நாட்களில் மாத்திரம் 120,120 சுற்றுலாப்பயணிகள் வந்துள்ளனர். 

கடந்த வருடம் மே மாதம் 112,128 சுற்றுலாப்பயணிகள் வந்துள்ளதாக அச் அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது. 

அவர்களில் அதிகளவானோர் இந்தியாவிலிருந்து வந்துள்ளதுடன் அவர்களின் எண்ணிக்கை 42,899 ஆகும். 

பிரித்தானியாவிலிருந்து 8,382 சுற்றுலாப்பயணிகளும், சீனாவிலிருந்து 7,965 சுற்றுலாப்பயணிகளும் வந்துள்ளனர். 

அதேநேரம் ஜேர்மனி, பங்களாதேஷ், அவுஸ்திரேலியா, ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects