தெற்கு ஐஸ்லாந்தில் உள்ள ரெய்க்ஜாவிக் தீபகற்பத்தில் எரிமலை வெடிப்பு தீவிரமடைந்துள்ளதால் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது எரிமலையானது எரிமலைக்குழம்புகளை கக்கி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அருகிலுள்ள கிரின்டாவிக் நகரத்தில் வசிப்பவர்கள் அனைவரும் இப்போது வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஐஸ்லாந்தின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ப்ளூ லகூன் அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், எரிமலையைச் சுற்றி விமானங்கள் செல்வதற்கு எந்தவிதமான தடைகளும் இல்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇