ஏறாவூர் பற்று, செங்கலடி பிரதேச மட்ட சிறுவர் சபையின் 2024 ஆம் ஆண்டிற்கான முதலாவது காலாண்டுக் கூட்டம் உதவி பிரதேச செயலாளர் திருமதி. நிருபா பிருந்தன் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது வீதி விபத்துகளில் இருந்து சிறுவர்களை பாதுகாக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்வு ஏறாவூர் பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.ஆர்.எம்.றுசைட் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து சிறுவர் கழக செயற்பாடுகளில் பிரதேச மட்ட சிறுவர் சபை உறுப்பினர்களின் பங்கு மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக தெளிவுபடுத்தப்பட்டதுடன், 2024 – 2026 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக தெரிவும் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பொலிஸ் உத்தியோகத்தர்கள், சிறுவர் கழக உறுப்பினர்கள் மற்றும் சிறுவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇