2024ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்காகவும், பரீட்சையை இடையூறு இன்றி நடத்துவதற்காகவும் விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பரீட்சைகள் திணைக்களம் ஆகியன இணைந்து இந்த விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளன.
தென்கிழக்கு வங்கக் கடலில் நாளை (23.11.204) குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
பரீட்சைக் காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை தவிர்த்து, மாணவர்கள் பரீட்சையை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் வகையில் இந் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, முப்படை, காவல்துறை உள்ளிட்ட அனர்த்த முகாமைத்துவ செயல்முறை தொடர்பான நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து , பரீட்சைக் காலத்தில் ஏற்படக்கூடிய தடைகளை நிர்வகிக்கத் தேவையான வழிகாட்டுதல்கள் சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றுவதைத் தடுக்கும் வகையில் ஏதேனும் அனர்த்தம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட நிலையத்தை அடைவதற்கான உதவிகளைப் பெறுவதற்கு சில தொலைபேசி இலக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர இலக்கமான 117,
011 3 668020
011 3 668100
0113 668013
0113 668010
076 3 117 117 அல்லது ,
பரீட்சை திணைக்களத்தின் அவசர இலக்கமான 1911 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும், அறிவிப்பதன் ஊடாக உடனடியாக நிலைமையைத் தவிர்ப்பதற்குத் தேவையான ஒருங்கிணைப்பை மேற்கொள்ள முடியும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇