இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் விருதுகள் 2024 விழா 09.06.2025 அன்று கொழும்பில் நடைபெற்றது.
இந்த விருது விழாவில் 2024 ஆம் ஆண்டில் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் வௌிப்படுத்திய திறமைகளின் அடிப்படையில் விருதுகள் வழங்கப்பட்டன.
அதன்படி, 2024 ஆம் ஆண்டின் ஆண்கள் கிரிக்கெட் வீரர் விருதை கமிந்து மெந்திஸ் வென்றார். 2024 ஆம் ஆண்டின் மகளிர் கிரிக்கெட் வீராங்கனை விருதை சமரி அத்தபத்து வென்றார்.
ஆண்கள் பிரிவு விருதுகள்:
சிறந்த ODI துடுப்பாட்ட வீரர் : பெத்தும் நிஸ்ஸங்க
சிறந்த ODI பந்துவீச்சாளர்: வனிந்து ஹசரங்க
சிறந்த ODI சகலதுறை வீரர் : சரித் அசலங்க
சிறந்த T20 துடுப்பாட்ட வீரர் : குசல் மெந்திஸ்
சிறந்த T20 பந்துவீச்சாளர்: வனிந்து ஹசரங்க
சிறந்த T20 சகலதுறை வீரர் : வனிந்து ஹசரங்க
சிறந்த டெஸ்ட் துடப்பாட்ட வீரர் : கமிந்து மெந்திஸ்
சிறந்த டெஸ்ட் பந்துவீச்சாளர்: பிரபாத் ஜயசூரிய
சிறந்த டெஸ்ட் சகலதுறை வீரர் : தனஞ்ஜய டி சில்வா
ஆண்டின் நம்பிக்கை நட்சத்திர வீரர்: ஜனித் லியனகே
மகளிர் பிரிவு விருதுகள்:
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தபத்து பின்வரும் விருதுகளை வென்றார்:
சிறந்த T20 துடுப்பாட்ட வீரர்
சிறந்த T20 பந்துவீச்சாளர்
சிறந்த T20 சகலதுறை வீரர்
சிறந்த ODI துடுப்பாட்ட வீரர்
சிறந்த ODI சகலதுறை வீரர்
மேலும், கவீஷா தில்ஹாரி சிறந்த ODI பந்துவீச்சாளர் விருதை வென்றார்.






இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










