இலங்கை மத்திய வங்கி அதன் பணவியல் கொள்கை நிலைப்பாட்டை மேலும் தளர்த்த முடிவு செய்துள்ளது.
அதன்படி, 21.05.2025 அன்று நடைபெற்ற கூட்டத்தில், இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபையானது, ஓரிரவு கொள்கை விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் குறைத்து 7.75% வீதத்தில் பராமரிக்க தீர்மானித்துள்ளது. இதன் மூலம் நாணயக் கொள்கையை மேலும் தளர்வடையச் செய்தது.
உள்நாட்டு மற்றும் உலகளாவிய அபிவிருத்திகளைக் கவனமாகக் கருத்திற்கொண்டதன் பின்னர் சபை இத்தீர்மானத்தினை மேற்கொண்டது. நாணயக் கொள்கை நிலையின் அளவிடப்பட்ட இத்தளர்த்தலானது உலகளாவிய நிச்சயமின்மைகள் மற்றும் தற்போதைய குறைவடைந்த பணவீக்க அழுத்தங்கள் என்பவற்றிற்கு மத்தியில் பணவீக்கத்தை 5 சதவீதம் கொண்ட இலக்கினை நோக்கி வழிநடாத்துவதில் ஆதரவளிக்குமென சபை அபிப்பிராயப்படுகின்றது.
இது தொடர்பான அறிக்கையை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்….


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










