இன்றைய காற்றின் தரம் குறித்து வெளியான அறிக்கை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான பகுதிகளில் ஆரோக்கியமான நிலையிலும், குருநாகல், காலி, புத்தளம், பதுளை, திருகோணமலை மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் மிதமான நிலையிலும் காற்றின் தரம் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

கடந்த 24 மணி நேரத்தில், பெரும்பாலான நகரங்களில் நாட்டில் காற்றின் தரக் குறியீடு மிதமான அளவிலும், யாழ்ப்பாணம், வவுனியா, கண்டி, கேகாலை, நுவரெலியா, எம்பிலிப்பிட்டி, முல்லைத்தீவு, அம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை ஆகிய பகுதிகளில் ஆரோக்கியமான நிலையிலும் காணப்பட்டது.

நாட்டின் பெரும்பாலான நகரங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு காற்றின் தரக் குறியீடு ஆரோக்கியமான நிலையில் காணப்படும்.

அதிகமாக போக்குவரத்து நெரிசல் காணப்படும் குறிப்பாக காலை 8.00 மணி முதல் 9.00 மணி வரை மற்றும் பகல் வேளைகளில் 3.00 மணி முதல் 4.00 மணி மணி வரை காற்றின் தரம் குறைவடைந்து காணப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects