கிராமிய மட்டங்களில் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு விதை மற்றும் சந்தை வாய்ப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

எதிர்காலத்தில் தானியங்களை இறக்குமதி செய்வதற்காக செலவிடப்படும் நிதியின் அளவைக் குறைக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. நாடு முழுவதும் உள்ள கிராமப்புற விவசாயிகளுக்கு விதைகள் மற்றும் சந்தை வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் தானிய இறக்குமதிக்கான அரசாங்கத்தின் செலவினங்களைக் குறைக்கும் நோக்கில் விரிவான திட்டத்தை செயற்படுத்துவதாக கிராமப்புற பொருளாதாரத்தின் இராஜங்க அமைச்சர் காதர் மஸ்தான் அறிவித்துள்ளார்.

முதற்கட்டமாக மன்னார் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டம் எதிர்காலத்தில் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘நிலையான நாட்டிற்கான கூட்டுப் பாதை’ எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் இந்த கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects