புதிதாகக் கொள்வனவு செய்யப்படும் உந்துருளிகளை பாதுகாப்பற்ற முறையில் சுத்தம் செய்ய முற்படும்போது ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அத்துடன், 20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களே இத்தகைய விபத்துக்களுக்கு அதிகமாக முகங்கொடுப்பதாக கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிளாஸ்டிக் மற்றும் சத்திரசிகிச்சை பிரிவின் மருத்துவர் கனிந்து மாதவ தெரிவித்துள்ளார்.
நாட்டில் கடந்த இரண்டு மாத காலப்பகுதிக்குள், 20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்கள் கையின் விரல் நுனிகளில் பலத்த சேதங்களுடனும் காயங்களுடனும் அடிக்கடி அவசர சிகிச்சைப்பிரிவிற்கு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து ஆராய்ந்தபோது, இந்தக்காயங்கள் ஏற்படுவதில் ஒரு குறிப்பிட்ட தொடர்பு இருப்பதைக் கண்டறிந்துள்ளதாகவும் மருத்துவர் கனிந்து மாதவ தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, பாதிக்கப்பட்ட இளைஞர்கள் அனைவரும் தமது புதிய உந்துருளிகளின், இயந்திரத்தை இயக்கிக்கொண்டு சங்கிலிகளை சுத்தம் செய்ய முயன்றபோதே இந்த விபத்துக்கள் நேர்ந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
உந்துருளிகளின் நிறுவனங்கள் சங்கிலிகளைச் சுத்தம் செய்யுமாறு அறிவுறுத்துகின்றன.
எனினும் இளைஞர்கள், உந்துருளிகளின் இயந்திரத்தை முதலாம் கியரில் முடுக்கியவாறே வெறும் கையால் பாதுகாப்பற்ற முறையில் சங்கிலியைத் துடைக்க முயற்சிப்பதாகவும், இதுவே விரல்களில் ஏற்படும் காயங்களுக்கான காரணம் என்றும் கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிளாஸ்டிக் மற்றும் சத்திரசிகிச்சை பிரிவின் மருத்துவர் கனிந்து மாதவ தெரிவித்துள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()









