சந்தையில் போதியளவு சோளம் கையிருப்பு இல்லாத காரணத்தினால் வரையறுக்கப்பட்ட இலங்கை அரச வர்த்தகக் (பல்நோக்கு) கூட்டுத்தாபனத்தின் மூலம் 15,000 மெற்றிக் தொன் சோளத்தை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
கோழி உணவு உற்பத்திக்கான மூலப்பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக தற்காலிக நடவடிக்கையாக இந்த சோளம் இறக்குமதி செய்யப்பட உள்ளது.
அதற்கமைய, பதிவு செய்யப்பட்டு வெளிநாட்டு விநியோகத்தர்களுக்கு உயர்ந்தபட்சம் 15.000 மெட்ரிக்தொன் சோளம் இறக்குமதிக்கான பெறுகையை மேற்கொள்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரான ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇